கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் தற்காலிக பதில் கல்விப்பணிப்பாளராக  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் இன்று  (16) கடமை பொறுப்பேற்றார் . வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் நேற்று (15) ஓய்வு பெற்றதையடுத்து நிரந்தர வலயக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கும் வரை பதில் பணிப்பாளராக செயற்படும் வண்ணம்  பொறுப்புக்கள் கடமைகளை ஓய்வு பெற்ற  முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதிக்கல்வி பணிப்பாளர்   எஸ்.புவனேந்திரனிடம் கையளித்தார் .

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்  பணிப்பாளராக கடமையாற்றிய  காரைதீவை சேர்ந்த  எஸ்.புவனேந்திரன் கடந்த காலத்தில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top