நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் நிலையில் தென்னிந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

 
Top