எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் என்று தெரிவித்துள்ள அவர், தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்குச் சட்டத்திற்கு மதிப்பளிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சகல சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேNளை, அனர்த்த மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top