கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரது மகன் பயாஸ் இத்தகவலை கூறினார்.


10 க்கும் மேற்படாதவர்களுடன் இன்று வியாழக்கிழமை, 2 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வரும்படி அவரிடம் கோரப்பட்டுள்ளது.இதையடுத்தே ஜனாசா குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.அதேவேளை அவரது குடும்பத்தினர் புதன்கிழமை இரவு பொலிஸ் பாதுகாப்புடன் மற்றுமொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பயாஸ் கூறினார்.

கருத்துரையிடுக

 
Top