ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 இலட்சத்தை எட்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை காலை 10 மணி வரை 937,170 ஆக உள்ளது.

இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.

நாடு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

அமெரிக்கா 215,417
இத்தாலி 110,574
ஸ்பெயின் 104,118
சீனா 82,381
ஜெர்மனி 77,981
பிரான்ஸ் 57,763
ஈரான் 47,593
பிரிட்டன் 29,865
சுவிட்ஸர்லாந்து 17,768
துருக்கி 15,679.

கருத்துரையிடுக

 
Top