எமது நாட்டில் தற்போது உள்ள கொரோனா தாக்கம் காரணமாக தொடர்ச்சியான முறையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அன்றாடம் தங்களுக்குரிய பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு நடமாடும் விற்பனைக்கு அனுமதி வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அப்துல் லத்தீப்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின்,கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் எம்.ஜெளபர் கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஹர்ரப்,பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்ஸான் உட்பட கிராம சேவகர்கள் மற்றும் நடமாடும் விற்பனையாளர் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top