கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுப்பற்று செயற்படுவதை கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்னரான சூழலில் நாடு தற்போது பயணிப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதன் காரணமாக எதிர்வரும் வாரங்கள் மிகுந்த சவாலுக்குரியவை எனவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கதக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினால் போதாது எனவும் மாறாக இரண்டு வார காலங்களுக்கு அதனை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top