சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் இருந்து டிசம்பர் மாத இறுதியில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது இது எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் கோவிட் - 19 (Covid -19) என்று பெயரிட்டுள்ளது.

coronavirus2 1579942492உலகையே அச்சுறுத்தலில் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் பரவ தொடங்கி, தற்போது இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளையும் பாதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 100,000 பேருக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இலங்கையிலும் தற்பொழுது இருவர் இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாக நேற்றைய தினம் (12) சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனப் பெண் ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுunnamed 4 சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து நாடு திரம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை இந்த சம்பவம் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. சுகாதார அமைச்சும் அரசாங்கமும் இணைந்து தற்பொழுது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த வைரஸ் பரவலை முற்றாக தடுப்பதற்கு எம்மால் முடியும்.coughphlegm 1518609833
கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகள்:
unnamedகாய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஆகியவை இருக்கும். சிலருக்கு டயேரியா பாதிப்புக்கள் கூட இருக்கலாம்.
தொற்றின் தீவிர அறிகுறிகள்:
மூக்கில் இருந்து நீர் ஒழுகுதல், தலைவலி, இருமல், மேல் சுவாசக் கோளாறு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல், உடல் சோர்வாக இருத்தல் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் காணப்படும்.
கொரோனா வைரஸ் தொற்றும் ஏனைய ப்ளூ காய்ச்சலைப் போன்றே பரவத் தொடங்குகின்றது. ஆனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்றவர்களை இது மிக வேகமாகத் தாக்கக்கூடும். இது குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என்ற வேறுபாடுகள் எல்லாம் பார்ப்பதில்லை. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்ற எவரிலும்; இந்த வைரஸ் எளிதாகத் தொற்றிக் கொள்ளும். இதிலிருந்து மீள்வதற்கு சில நாட்கள் எடுக்கலாம்.
unnamed 3கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் இருந்தால் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது. மற்றவர்களுக்கு காற்றின் மூலம், தொடுதல் மூலம், இருமல் போன்றவற்றின் மூலம் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமோ அல்லது உறுதியாக தெரிந்தாலோ முதலில் முறையான மருத்துவ பரிசோதனையும் அதன்பின் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் பெறுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் விரைவில் குணமடைவதுடன் மற்றவர்களுக்கும் பரவாமல தடுக்க முடியும்.
இந்த கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே தடுக்கும் வழிமுறைகளைக் கையாளுவது மிக அவசியம். ஏனென்றால் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கிட்டதட்ட குறைந்தபட்சம் 14 நாட்களாவது தொற்றுக்கள் இருக்கும். அதிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களை மிக மோசமாக பாதிக்கும்.sf 05sneeze
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்காக குறிப்பாக தடுப்பூசிகள் என்று எதுவும் கிடையாது. மற்ற சில நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் மூலம் உங்களுடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் பணியில் மட்டும் மருத்துவர்கள் செயல்பட்டு வருகிறார்களே தவிர கொரோனாவிற்கென தனியே தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுக்கும் வழி முறைகள்:
மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல்
அடிக்கடி கைகளை கழுவுதல்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில், முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மருத்துவ பணியாளர்களை கொண்டு சிகிச்சை அளித்தல்.
கொரோனா வைரஸ் யாரிடமிருந்து, எங்கிருந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரவியுள்ளது என்பதை கண்டறிதல்.
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?
now use air to to wash handsஇருமும் போதோ அல்லது தும்மும் போதோ கைகுட்டை கொண்டு இருமுவது நல்லது.
தொடர் சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனே மருத்துவரைநாட வேண்டும்.
குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது சிறந்தது.
மற்றவருடன் உரையாடும் பொழுது சற்று இடைவெளியுடன் நின்று உரையாடுவது சிறந்தது.
அதிக கூட்டங்கள் இருக்கும் பகுதிக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.
உயர் ரக முகமூடியை வாங்கி அணிந்து கொள்வது வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
அடிக்கடி முகத்தில், வாய் மற்றும் மூக்கு பகுதியில் கைகளை கொண்டுபோகாமல் இருப்பது நல்லது.
ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கைகளை சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த வைரஸ் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்திகள் (Immunity) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இதற்காக அன்றாட உணவில் சேர்த்தக்கொள்ள வேண்டியவை:large corona viruss 61290
குறிப்பாக, அன்றாடம் நம் உணவில் சேர்க்கப்படும் மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்ற பொருட்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே இதனை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
பழங்களில், மாம்பழம், அன்னாசிப்பழம், எலுமிச்சைப்பழம், ஸ்ட்ராவ்பெர்ரி போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. சக்கரவல்லி கிழங்கு சாப்பிட்டால் சிறந்தது.
மேலும், நாம் சாப்பிடும் உணவுகளில் கேரட், குடைமிளகாய், தேங்காய் சேர்த்து கொள்வது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.immunity food 3aej5
AKM / S.Nagalogini

கருத்துரையிடுக

 
Top