ஊரடங்கு சட்டம் தளர்ததப்பட்டதையடுத்து வெறிச்சோடிப் போயிருந்த கல்முனை நகரம் பொருட் கொள்வனவுக்காக சனத்திரளால் நிரம்பி வழிந்தது.

கல்முனை கொரணா செயலணியின் திட்டப்படி இன்று  (26) கல்முனை பொதுச்சந்தை வியாபாரம் விளையாட்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்டதையடுத்து கல்முனை சந்தாங்கேணி மைதானம் மக்களால் நிரம்பி வழிந்தது. நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிசாரும், சுகாதார துறையினரும் மேற் கொண்ட நடவடிக்கைகளை தாண்டியும்  மக்கள் பொருட் கொள்வனவில் அக்கறை செலுத்தியதையும் மக்கள் அலைமோதியதையும்  அவதானிக்க முடிந்தது.

எனினும் வங்கி மற்றும் வர்த்தக நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காணப்பட்டனர்

பொருட் கொள்வனவுக்காக கல்முனைக்கு வருகை தந்த மக்களை கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

கருத்துரையிடுக

 
Top