சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்றும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் ஆராயுமாறு சட்ட அறிஞர்களுக்கு மற்றும் சிறைச்சாலை திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பினை பரிந்துரைக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் அவரை சந்தித்த போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்னர் சிறைச்சாலை வளாகத்திற்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்த போது சிறைக்கைதிகள் அவரிடம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

 
Top