கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் அநுராதபுரம் பொது வைத்தியசாலையிலும்  நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் மூவரும் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தேசிய வைத்தியசாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.


கருத்துரையிடுக

 
Top