அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நிறைவடைந்தவுடன் அனைத்து பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் விற்பனை நிலையங்களையும் உடனடியாக மீண்டும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக இந்த விற்பனை நிலையங்களை திறக்குமாறு கூட்டுறவு மேம்பாட்டு ஆணையர் / பதிவாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு கடைகளுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் பற்றாக்குறை இருந்தால், தமது மாகாணத்தின் கூட்டுறவு மேம்பாட்டு ஆணையரால் இலங்கை கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்துடன் (MaRK Fed) இணைந்து பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கங்கத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு போதுமான அளவு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top