முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளம் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒரு தொகுதியினர் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 29 பெண்களும் 12 ஆண்களும் ஆக 41 பேர் நேற்று (20) மாலை அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொட்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களை 14 நாட்களுக்கு தனிமைப் படுத்துவதற்காக முல்லைத்தீவு கேப்பாபிலவில் விமானப்படை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு இவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் கொரோனா பரிசோதனை நிலையங்கள் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த நிலையிலும் தற்போது வடக்கு கிழக்கை இலக்காக வைத்து இவ்வாறானவர்கள் கொண்டுவரப்படுதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top