இன்று மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் இன்றைய தினம் (25) பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 252 பேர் நாடு பூராகவும் உள்ள 22 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top