நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை மாநகர பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை நகரில் பேருந்து தரிப்பிடம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை கல்முனை மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் உத்தரவுக்கமைய  மாநகர சபை சபை  சுகாதாரப் பிரிவினால் இன்று (22 )  மாநகர வைத்திய அதிகாரி  அர்ஷத் காரியப்பர்  தலைமையில்  முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை , மருதமுனை சாய்ந்தமருது, பிரதேசங்களிலுள்ள மக்கள் நடமாட்டம் நிறைந்த இடங்களில்  தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top