உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரவ வெறும் நான்கு நாள்களே ஆகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் மொத்த உலக நாடுகளும் முககசம் அணிந்துகொண்டு மூச்சுவிடத் திணறிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு வைரஸின் தாக்கம் மிக வீரியமாக உள்ளது.
உலகம் முழுவதும் பரவக்கூடியதாக மாறியுள்ள கொரோனா-வைரஸ் ஆட்கொல்லி தொற்றும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78,842 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,510 ஆகவும் உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வளர்ந்த வல்லரசு நாடு முதல் வளரும் நாடுகள் வரை தவித்துவருகின்றன.
மொத்தமாக 67 நாட்களுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது. இரண்டு இலட்சம் பேருக்குத் தொற்ற 11 நாட்களே எடுத்தது. எனினும், நான்கு நாட்களுக்குள் மொத்தமாக மூன்று இலட்சம் பேருக்குத் தொற்றியுள்ளது.

இருந்தபோதிலும், இந்த நிலையை மாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதனொம் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். எங்கிருந்து நோய் தொற்றியது என்பதைக் கண்டுபிடிக்கும் மூலோபாயங்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு பிரிட்டன் தீவிர கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அத்தியாவசிப் பொருட்களை வாங்குவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும், மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அத்தியாவசிய வேலைக்கு சென்று திரும்புவதற்கும் மாத்திரமே மக்கள் வெளியே செல்ல வேண்டும். மற்றபடி வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என பிரதம மந்திரி பொரிஸ் ஜொன்ஸன் கோரியுள்ளார். அவர் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கொரோனா-வைரஸ் காரணமாக இத்தாலியை அடுத்து ஸ்பெயினில் பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு வைரஸ் தொற்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றியவதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஸ்பெயனில் இராணுவ வீரர்கள் முதியோர் இல்லங்களைத் தொற்றுநீக்கம் செய்தார்கள். இதன்போது, படுக்கைகளில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த முதியவர்களைக் கண்டதாக ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
தென்கொரியாவில் கொவிட்-நைன்ரீன் நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 64 பேருக்கு மாத்திரமே புதிதாக தொற்று ஏற்பட்டதென அறிவிக்கப்படுகிறது.
சீனாவிலும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் மத்தியில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 50ஆயிரத்தை எட்டியுள்ளது. வைரஸ் தொற்றி சுமார் 15 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளார்கள். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டுவதாக பிந்திய புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில், 476 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு மார்ச் 31ஆம் திகதி வரை போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அன்றைய நாள் வரை ரயில் சேவைகளோ, மெட்ரோ ரயில் சேவைகளோ, மாநிலங்களுக்கு இடையிலான அரச போக்குவரத்து சேவைகளோ இடம்பெற மாட்டாது. தமிழகத்தில் கொரோனா-வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேக வைத்தியசாலை ஸ்தாபிக்கப்படும்.

கருத்துரையிடுக

 
Top