கொரானா  வைரஸ் பரவுவதை தடுக்கும் முகமாக எதிர்வரும்  திங்கட் கிழமை ஊரடங்கு  சட்டம்  நீக்கப்பட்டாலும்  கல்முனையில்  வர்த்தக நிலையங்கள் ,பொது சந்தை திறக்கப்படமாட்டாது  மீறி திறந்தால் திறக்கப்படுகின்ற வர்த்தக நிலையங்களின் வியாபார உரிமைப்பத்திரம்  மாநகர சபை கட்டளை சட்டத்தின் கீழ் இரத்து செய்யப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார் .

கொரானா  செயலணியின்  03ஆவது அமர்வு இன்று    கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடை பெற்றது. பிரதேச செயலாளர்கள் ,பொலிஸ் ,இராணுவ ,கடற்படை அதிகாரிகள் ,சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சுகாதார வைத்திய அதிகாரிகள் ,பொது சுகாதார பரிசோதகர்கள்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில்  இதனை  கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார் .

சுகாதார திணைக்களம் வர்த்தக நிலையங்களை  திறப்பதற்கு தங்களின்  நியாயபூர்வமான எதிர்ப்பு கருத்தினை தெரிவித்ததையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக

 
Top