கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போன்று பரவி வருவதால் பலியோனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடுகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரழந்தோரின் எண்ணிக்கையும் அஞ்சப்படும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இன்று மதியம் நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,060 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 6,528 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.


பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 785 பேர் குணமடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top