நாட்டில் ஊரடங்கு சட்டத்தை தளர்தினாலும் மக்கள் பாதுகாப்பு கருதி கல்முனை வர்த்தக நிலையம் பொதுச் சந்தையை  நாளை  (26) திறப்பதில்லையென கல்முனையில் இன்று (25) நடை பெற்ற கொரொணா அனர்த்த செயலணி உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது


கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் நடை பெற்ற இந்த உயர் மட்டக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் , சுகாதார வைத்திய அதிகாரிகள்,மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ், பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கலாக வர்த்தக சங்க பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

எனினும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம்,நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானம்,மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானம் சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானம் மற்றும் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய மைதானங்களில் சில்லறை வியாபாரம் மற்றும் மரக்கறி வியாபாரங்களை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மக்களின் ஒன்று கூடல் செறிவைக் கட்டுப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 


கருத்துரையிடுக

 
Top