கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குணமடைந்த இருவரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இதுவரை 9 பேர் இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இந்நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் நோயாளர்களும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை நாட்டில் 106 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதில் 8 பேர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும், மின்னேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறனர்.

மேலும் 109 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top