இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டில் இதுவரை 91 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நாள் முடிவில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 ஆக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் இதுவரை 9 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top