தனது உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய ஊடகப் பிரிவின் ஊடகவும், தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தின் ஊடக மாத்திரமே வெளியிடப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்து ஜனாதிபதி இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்ற வகையில் தான் வெளியிடும் அறிக்கைகள் சமூக ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டு பொய்யான செய்திகளை உள்ளடக்கி வெளியிடப்படுவதாகவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top