ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அந்த வெற்றியை கண்ணியத்துடன் அனுபவிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் இதுவரையும் எமது தேர்தல் பிரச்சாரங்களை முன்மாதிரியாகவும் மற்றும் கண்ணியத்துடனும் முன்னெடுத்துள்ளோம்.

அதேபோல், தொடர்ந்தும் தரமான மற்றும் பயனுள்ள அரசாங்கம் ஒன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்.

இதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தல் வெற்றியை மிகவும் கண்ணியத்துடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாடுமாறு பொது மக்களிடம் கோருகின்றேன்.

நாம் இதுவரை எமக்கு வழங்கப்பட்ட அனைத்து கடமைகளையும் கண்ணியத்துடன் நிறைவேற்றியுள்ளோம்.

எதிர் தரப்பினர் பல வருடமாக இந்த அரசாங்கத்தினை நடாத்திச் சென்ற போதும் பொதுமக்களுக்கு ஒன்றையும் செய்யாமல் அதிகாரத்தை கோருபவர்களாக உள்ளனர்.

அதன் காரணமாக இதுவரை பராமரிக்கப்பட்ட முன்மாதிரி நிலையையும் மற்றும் கண்ணியத்தையும் எதிர்வரும் அரசாங்கத்தின் கீழும் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top