ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இந்த காலப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு 24 மணித்தியாலமும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க கூடிய வகையில் விசேட முறைப்பாட்டு பிரிவு ஒன்றை அமைத்துள்ளது.

தேர்தல் துஸ்பிரயோகம், ஊழல், மோசடி உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய எந்த வகையான முறைப்பாடுகளையும் இந்த பிரிவில் தெரிவிக்க முடியும்.

இவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளின் இரகசிய தன்மையை பாதுகாப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பின்வரும் இலக்கங்களின் ஊடாக தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.

மேல் மாகாணம் 070-4701141, மத்திய மாகாணம் 070-4701142, வட மேல் மாகாணம் 070-4701143, சப்ரகமுவ மாகாணம் 070- 4701144, வட மத்திய மாகாணம் 070-4701145, தென் மாகாணம் 070-4701146, ஊவா மாகாணம் 070-4701147 மற்றும் மற்றும் கிழக்கு மாகாணம் 070-4701148 ஆகிய இலக்கங்களுடன் முறைப்பாடுகளை அளிக்க முடியும்

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களை கேட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top