கிழக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துமாறும், குறிப்பாக காத்தான்குடி டீன் வீதி, மத்திய வீதி மற்றும் முகைதீன் பள்ளிவாசல் வீதி  ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடுமாறும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இருந்த போது குறித்த அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகளை உள்ளடக்கியிருந்ததோடு அதற்கான நிதியினை கொந்தராத்து நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்திருந்தார். 

ஆட்சி மாறியுள்ள இந்நிலையில் குறித்த வேலைத்திட்டங்களை விடயப்பரப்புக்கு பொறுப்பான புதிய அமைச்சரின் அனுசரணையுடன் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட கொந்தராத்து நிறுவனத்திற்கும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடத்திலும் முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, குறிப்பாக காத்தான்குடி டீன் வீதி, மத்திய வீதி மற்றும்  புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆ பள்ளி வீதி ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் மிக அவசரமாக செப்பனிடும் பணிகளை ஆரம்பிக்குமாறும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அதற்கமைய குறித்த வீதிகள் செப்பனிடும் பணிகள் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அதிகாரிகள் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்துள்ளனர்.” – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top