நேற்று (27) பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிமல் லன்சா, காஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக அனுரத்த ஆகிய மூவரும் இன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் நிமல் லன்சா சமுதாய வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராகவும், காஞ்சன விஜயசேகர கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்திக அனுருத்த பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top