புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை (27) பதவியேற்க உள்ளனர்.

நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இவ்வாறு பதவியேற்க உள்ளனர்.

அத்துடன் புதிய அமைச்சின் செயலாளர்கள் நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

 
Top