கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 (1,183,205) வாக்காளர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 1258 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் 94,781 பேரும், மூதூர் தொகுதியில் 107,30பேரும், சேருவில தொகுதியில் 79,303 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (398,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,672 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 3 ஆயிரத்து 790 பேர் (503,790) பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் 174,421 வாக்காளர்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 88,217 வாக்காளர்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 76,283 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 164,869 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க 523 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top