நேற்றைய தினம் (26) சம்மாந்துறையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தீவிரவாதிகளுடையது என தெரிவிக்கப்படும் 119 பொருட்களின் பட்டியலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இதில் தற்கொலை குண்டுதாரிகள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சியில் காணப்படும், ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் அவர்கள் அணிந்திருந்த கறுப்பு உடைகள் ஆகியன மீட்கப்பட்டிருந்தன.
அரசாங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (26) பிற்பகல் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில் சுமார் ஒரு இலட்சம் சன்னங்கள் (சிறிய இரும்பு கோளங்கள்), 150 ஜெலிக்னைற் குச்சிகள், ட்ரோன் கமெரா, லெப்டொப் ஒன்று, உள்ளிட்ட 119 பொருட்கள் மற்றும் வேன் ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top