குடிநீரில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டுள்ளதாக வதந்தியைப் பரப்பிய சந்தேகநபர்கள் இருவருக்கு, மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்துள்ளார்.
கொழும்பை உள்ளிட்ட சில பிரதேசங்களில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டுள்ளதாக நேற்று (22) கொழும்பு முழுவதும் வதந்தியொன்று பரப்பப்பட்டு வந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தண்டனைச் சட்டக் கோவை, சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் (ICCPR Act) ஆகிய சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top