கல்முனை நகர் அருள் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர்  தேவஸ்தான வருடாந்த தேர் திரு விழா இன்று வியாழக்கிழமை (21)  பக்த அடியவர்கள் புடைசூழ விமர்சையாக இடம் பெற்றது. .

சிவனடியார்களால் வியந்து பாடப்பெற்றதும் சித்தர்களால் சிவா பூமி என போற்றப்பட்டதும்  ரிஷிகளின் பாதம் பட்ட புண்ணிய பூமியாம்  கிழக்கின் கல்முனை  மாநகரில் அடியவர்கள் இன்னல்கள் களைந்து  அருள் மழை பொழிய கோயில் கொண்டு எழுந்தருளி நவரத்தின கசிந்த சொர்ண சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்  கௌரி அம்பிகை  உடனுறை  சந்தான ஈஸ்வரப்பெருமான் தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு விநாயகர் வெளிப்பாட்டோடு ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு சந்தான ஈஸ்வரப்பெருமான் தேரில் ஆரோக்கரித்து வீதி உலா இடம் பெற்றது.
கடந்த திங்கட் கிழமை (11) கொடியேற்றத்துடன் ஆரம்பமான கிரியைகளை தொடர்ந்து மூன்று நாட்கள் திரு விழாக்கள் நடை பெற்று  ஐந்தாம் நாள் சடங்கான மாம்பழத்திருவிழா  திரு விளக்கு பூஜை  பக்தி முக்தி திரு விழாக்கள் நடை பெற்று   திங்கட் கிழமை (18)  வேட்டைத்திரு விழாவும்  நடை பெற்றது.  செவ்வாய்க்கிழமை (19) திருக்கல்யாண வழிபாடு இடம் பெற்று  நேற்று புதன் கிழமை (20) சப்பர திருவிழாவும்  இன்று வியாழக் கிழமை தேர் திரு விழாவும் நடை பெற்று நாளை வெள்ளிக்கிழமை (21) தீர்தோற்சவத்துடன்  வருடாந்த பிரமோற்சவ  கிரியைகள் நிறைவு  பெறும் .
ஆலயத்தில் விசேட தினம் தவிர்ந்த  நாட்களில் சாந்தி பூசை அபிஷேகம் தம்ப பூசை வசந்த மண்டப பூசை பஜனை தெய்வீக பேருரை என்பனவூம் இடம்பெற்று  தினமும் அன்னதானம் வழங்கலும்  நடை பெற்றது
 ஆலய  பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ ஸ்ரீ ராமச்சந்திர தவசீலன்  குருக்கள் தலைமையில்  தேவிபூஜா துரந்தரர்  வவூனியா சிவஸ்ரீ  குக அரவிந்த  குருக்கள்  பிரதம பூசகராக கலந்துகொண்டு வழிபாடுகளை  நடாத்தி வைத்தார்.
தேர் திரு விழா தினமான இன்று  யாழ் புகழ் ஜீ.பிரேம் குமார் குழுவினரின் மேல தாள வாத்தியங்களுடன்  காவடியாட்டம் இமாணவர்களின் கரகாட்டம் போன்ற பல நிகழ்வூகளுடன் பக்த அடியவர்கள் வடம் பிடித்து சந்தான ஈஸ்வர பெருமான் தேர்வலம்  வந்தமை சிறப்பம்சமாகும் 

கருத்துரையிடுக

 
Top