"சவிபல சிஷ்ய "திட்டத்தின் கீழ் பாடசாலையில் கல்வி பயிலும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் 2019.01.07ம் திகதியன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன்  தலைமையில் நடைபெற்றது. 
அமைப்பின் நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான 100000/- பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஐ.எம் .றிகாஸ்  கலந்து கொண்டதோடு விசேட அதிதியாக சிரேஷ்ட தலமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்..சாலிஹ், முகாமைத்துவ பணிப்பாளர், திட்ட முகாமையாளர், வங்கி முகாமையார்,உதவி முகாமையாளர்கள் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அமைப்பின் செயலாளர்,பொருளாளர், பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தன. 

கருத்துரையிடுக

 
Top