முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரி.கபீர் அவர்களின் மறைவுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் இன்று சபை அமர்வில் ஆழ்ந்தஅனுதாபம் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் விசேட பொதுச் சபை அமர்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எஸ்.ரி.கபீர் அவர்கள் காலம்சென்ற தகவலை சபைக்கு அறிவிப்பு செய்த முதல்வர், 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 1999 ஆம் ஆண்டு வரை அவர் எமது முன்னைய கல்முனை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளார் எனத் தெரிவித்தார்.
அத்துடன் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்கார் சபையிலும் அவர் நீண்ட காலமாக அங்கம் வகித்து, பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் 
அன்னாரது சேவைகளை பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்- என்று முதல்வர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top