வெள்ளத்தில் மூழ்கும் கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு விடிவு கிடைத்துள்ளது . கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது . இந்த செய்தி கல்முனை நியூஸ் இணையத்தளத்தில்  வெளிக்கொண்டுவரப்பட்டது . இந்த செய்திக்கு பலன் கிடைத்துள்ளது .
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்லூரி அதிபர் ஆகியோர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக  அம்பாரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பாடசாலையில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்க வடிகால் அமைப்பதற்கு 2.0மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளார் . பாராளுமன்ற உறுப்பினருக்கும் ,வலயக்கல்விப்பணிப்பாளருக்கும் கல்லூரி அதிபருக்கும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இந்த செய்தியை ஊடகங்களுக்கு வெளிக்கொண்டுவந்த  கல்முனை நியூஸ் இணையத்தளத்துக்கும் பெற்றோர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top