ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின்கீழ் கல்வி அமைச்சினால்  பாடசாலைகளில்  கல்வி பயிலும்  பார்வைக்குறைவு மற்றும் கேட்டல் குறைவு மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கும் திட்டம் பாடசாலைகள் மட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில்  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 65 பாடசாலைகளில் பார்வைக்குறைபாடு ,கேட்டல் குறைபாடுள்ள  26 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது மழ்ஹர் சம்ஸ் மகாவித்தியாலயம்,கல்முனை மஹ்மூத் மகளீர் வித்தியாலயம் ,மருதமுனை அல் -ஹம்றா  வித்தியாலயம்,நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ,கல்முனை றோயல்  வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து இனங் காணப்பட்ட 26 மாணவர்ளுக்கும் மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கி வைக்கப்பட்டது .
மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று   கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில்  கல்முனை வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப்  பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஜிஹானா அலிப் , சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் நஸ்மியா சனூஸ் , விசேட கல்விப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் ரீ.எல்.ஏ.ஹபீபுல்லாஹ் ,விசேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஷியாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உரையாற்றும் போது  இந்த நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் கல்வி பெறாதவர்களாக இருக்கக் கூடாது என்ற விடயத்தில் ஜனாதிபதி உட்பட கல்வி அமைச்சு மிகவும் அக்கறையுடன் உள்ளதை இந்த நிகழ்வு ஒவ்வொரு பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும்  சொல்லுகின்ற செய்தியாகும் , கல்வி கற்பதற்கு குறைபாடுகள் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. எமது நாட்டைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மாணவர்களுக்கான கல்வியில் எமது ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுத்து வருகின்ற  நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. பாடசாலை மாணவர்களுக்கு நூறு வீத இலவசக்கல்வியை வழங்குகின்ற எமது நாட்டில் இப்போது மாணவர்களின் சுகாதார விடயத்திலும் நூறு வீத அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது. சுரக்ஸா காப்புறுதி திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பாரிய அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன . அதற்கும் மேலாக ஒவ்வொரு வகுப்பறையில்  உள்ள மாணவர்களின் தேவைகளும் கண்டறியப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகின்றன . எனவே  மாணவர்கள் கல்விகற்பதற்கு எமது நாட்டில் எந்த தடங்கலும் இல்ல என  வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் .கருத்துரையிடுக

 
Top