எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அல்லது கோட்டபய ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒருவர் திறந்த கூட்டணி ஒன்றின் ஊடாக களமிறங்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

நேற்று (07) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் நேற்று மாலை குறித்த கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

கருத்துரையிடுக

 
Top