அண்மையில் கைது செய்யப்பட்ட 07 பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

கடந்த வாரம் தொல் பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் எடுத்த புகைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பொறியியல் பீட மாணவர்களுடைய பொற்றோர்கள் இவ்வாறு சந்தித்தனர். 

எதிர் வரும் 05 ஆம் திகதி வழக்கு  விசாரனைக்கு எடுத்துக்
கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது கிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் சட்டரீதியான விபரங்களை  கேட்டறிந்ததோடு , இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக வாதாடுகிற சட்டத்தரிணியை தொடர்பு கொண்டு தன்னுடைய பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என சட்ட ஆலோசனையை கேட்டறிந்து கொண்டார் , இது தொடர்பாக பொலிஸார் புராதண தொல் பொருள் திணைக்களத்தில் இருந்து விரிவான அறிக்கையினை கோரியுள்ளதாகவும் , அறிக்கை கிடைத்தவுடன் அந்த அறிக்கை ஆராய்ந்து தீர்பினை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்பதாக சட்டத்தரணி மேலும்  குறிப்பிட்டார். 

மேலும் புராதன தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் "P.B மந்தவல " அவர்களை உடனடியாக  தொலைபேசியினுடாக தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் இந்த மாணவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்த விடயம் அல்ல தற்செயலாக இடம் பெற்ற விடயம் ஆகவே தாங்கள் மன்னிப்பு வழங்கி தங்களின் நீதிமன்ற  அறிக்கையை சாதகமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் எதிர்வரும் வாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.

மேலும் அந்த மாணவர்களை சட்டரீதியான முறையில் அவர்களை விடுதலை செய்வதற்கு தான் முயற்சியையும்,ஒத்துழைப்பையும்  வழங்குவதாகவும் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புழ்ழாஹ் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHM அஸ்பர் JP, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் KLM பரீட் JP மற்றும் ஆளுனர் இணைப்பு செயலாளர் முகம்மத் றுஸ்வின் அவர்களும் கலந்து கொண்டார். 

கருத்துரையிடுக

 
Top