உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் கல்முனை தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (30) இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான நடராசா நந்தினி, ஏ.ஆர். செலஸ்டினா, கே. புவனேஸ்வரி, சுமித்ரா ஜெகதீசன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி தமிழ் பிரதேசங்களில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் அபிவிருத்திப் பணிகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்தவகையில் கல்முனை தமிழ் பிரதேசத்தின் அபிவிருத்தி தேவைப்பாடுகளை இனங்கான வேண்டியுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவ்வபிவிருத்திகளை இனம்காண்பதற்காகவும் அவற்றை சிறப்பாக செயற்படுத்துவதற்காகவும் குழு ஒன்றை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

அதற்கமைவாக கோவில் தர்ம கர்தாக்கள், கல்விமான்கள் மற்றும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழு ஒன்றை விரைவாக அமைத்து தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி பணிகளை முன்மொழியுமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார். 


கருத்துரையிடுக

 
Top