எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(15) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும்  தைப்பொங்கலுக்கு  முதல் நாள் திங்கட் கிழமையும் (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . இதற்கான உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநரினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரினரின் செயலாளரினால் மாகாண கல்விப்பணிப்பாளருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவுக்கமைய  கிழக்கு மாகாண சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கும்  மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .
இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாணப்பாடசாலைகள்  அனைத்துக்கும்  திங்கட் கிழமை (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


திங்கட் கிழமை (14) விடுமுறை தினத்திற்குப் பதிலாக எதிர் வரும் சனிக்கிழமை (19) பதில் பாடசாலை நடத்துவதற்கும் கிழக்குமாகாண ஆளுநரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top