கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்த கல்வித்துறையில் 39 ஆண்டுகள் சேவையாற்றிய திருமதி வீ.திரவியராஜா கடந்த திங்கட் கிழமை (2018.12.31) ஓய்வு பெற்றார்.
1958 டிசம்பர் 31இல் பலாங்கொடையில்  பிறந்த ராஜமல்லிகா  திரவியராஜா தனது ஆரம்பக்கல்வியை  பலாங்கொடை சாந்த அக்னஸ் மகளீர் கல்லூரியிலும்  இடைநிலைக்கல்வியை கண்டி மோபிரே  கல்லூரியிலும் உயர்கல்வியை பலாங்கொடை ஸாஹிரா மகாவித்தியாலயத்திலும் கற்றுள்ளார் .

மும்மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற  இவர் 1979 ஆம் ஆண்டு  பலாங்கொடை சிசில்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார் . 1983 தொடக்கம் 1984 வரையான ஓராண்டு காலத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கணித ஆசிரியராக பயிற்றப்பட்ட இவர் 1991 இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கலைமானிப்படத்தையும் பெற்றுக்கொண்டார்.

1991 இல் நடைபெற்ற  அதிபர் தரம்- iii  போட்டிப்பரீடசைக்கு தோற்றி அதில்  சித்தியடைந்த திருமதி திரவியராஜா 2004.06.01 தொடக்கம் தரம்-i  அதிபராக பதவி  உயர்வு பெற்று இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம் ,பலாங்கொடை மெதகந்த தமிழ் வித்தியாலயம்,பலாங்கொடை கனகநாயகம் மத்திய கல்லூரி , மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் அதிபராக பணியாற்றி அக்காலத்தில் அப்பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய இவர் 2016.03.14 ஆம் திகதி முதல் கல்முனை தமிழ் பிரிவுக்கான கோட்டக்கல்விப் பணிப்பாளராக நேர்முகப்பரீட்சையில் தெரிவாகி  நியமனம் பெற்ற  இவர் அன்று தொடக்கம்  கல்முனை கல்வி வலயத்தின்  தமிழ் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர் .
மட்டக்களப்பு  மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக களுவாஞ்சிகுடி கோட்டக்கல்வி பணிப்பாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற வீ.திரவியராஜாவின் மனைவியான இவர் இரண்டு ஆண்  பிள்ளைகளுக்கு தாயுமாவார் 

கருத்துரையிடுக

 
Top