சந்தேகநபர்கள் சாய்ந்தமருது, திஹகொட, தணமல்விலவைச் சேர்ந்தவர்கள்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய பரீட்சார்த்திக்கு பதிலாக வேறொருவர் பரிட்சை எழுதிய தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உரிய பரீட்சார்த்தி மற்றும் அதற்கு உதவிய சந்தேக நபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) இடம்பெற்ற இடம் பெற்ற கணிதப் பாட பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது 
சாய்ந்தமருது03 ஐச் சேர்ந்த பாடசாலையொன்றில் உரிய பரீட்சார்த்திக்கு பதிலாக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட சாய்ந்தமருது 13 ஐச் சேர்ந்த 19 வயது நபர் ஒருவரை  கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை இன்றைய தினம் (11) கல்முனை நீதவான் நீதிமன்ற முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தணமல்வில
இதேவேளை தணமல்வில, போதாகம பிரதேசத்திலுள்ள பாடசாலையில் வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 40, 45 வயதுடைய பரீட்சார்த்தி மற்றும் அவருக்கு உதவிய ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திஹகொட
மேலும், நேற்றைய தினம் (10) திஹகொட, புஹுல்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையில் கணித பாட பரீட்சையில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட கரதோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24, 25 வயதுடைய பரீட்சார்த்தி மற்றும் அவருக்கு ஆள் மாறாட்டத்தில் உதவிய சந்தேகநபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். TKN

கருத்துரையிடுக

 
Top