தடைதாண்டல் பரீட்சைக்கான விலக்கழிப்பு பயிற்சியை பூர்த்தி செய்த அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  சமீபத்தில்  நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடை பெற்றது.

அரச அதிவிசேட  வர்த்தமானிப் பத்திரிகை 2052 / 26 இற்கு  அமைய அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம்-1 இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தடைதாண்டல் பரீட்சையில் விலக்கழிப்பினை பெற்றுக் கொள்வதற்கான தமிழ்மொழி மூல இரண்டாம் கட்ட  பயிற்சி நெறி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு திணைக்களத்தைச் சேர்ந்த 75 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு  10 நாட்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்  கூடத்தில்  இந்த பயிற்சி நடைபெற்றது.

பொது நிருவாக அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட இந்த பயிற்சி செயலமர்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  கே.விமலநாதன் ,நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்,திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்,அட்டாளச்சேனை  பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ்   ஆகியோரால் விரிவுரைகள் நடத்தப்பட்டன .

 இப்பயிற்சி நெறியின் இறுதி நாள்  சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அட்டாளச்சேனை  பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் கலந்துகொண்டு  பயிற்சியை நிறைவு  செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தார்.


கருத்துரையிடுக

 
Top