கணக்காளர்-  ஹபீபுல்லாஹ் 

எதிர்வரும் காலத்தில் அமையப்போகும் அரசாங்கத்தினால்  சமர்பிக்கப்படவுள்ள  வரவுசெலவுத்திட்டம்  கவற்சிககரமானதாக அமையும் . குறிப்பாக  இதில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு  பல அனுகூலங்கள் பெறக்கூடிய வாய்ப்பு அதிகம் ஏற்படுத்தப்படும் என நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் தெரிவித்தார்.

அரச அதிவிசேட  வர்த்தமானிப் பத்திரிகை 2052/26 இற்கு  அமைய அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் -1இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தடைதாண்டல் பரீட்சையில் விலக்கழிப்பினை பெற்றுக் கொள்வதற்கான தமிழ் மொழி மூல  பயிற்சி நெறி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 75 உத்தியோகத்தர்களுக்கு  அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்  கூடத்தில்  நடைபெறுகிறது.

இபயிற்சி வகுப்பில் வளவாளராக கலந்து கொண்டு அரசின் வரவு செலவு திட்ட முறை மற்றும் வருடாந்த மதிப்பீடு ,வரவு செலவு வட்டத்தின் அறிமுகம் தொடர்பாக   உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் போதே மேற்கண்ட விடயங்களை தெளிவு படுத்தினார்.

கணக்காளர் மேலும் தெரிவிக்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் கூடுதலான அனுகூலங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அரச உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் .கடந்த அரசாங்கத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படட்ட சம்பள மாற்றியமைப்பு  நிலுவைக்கொடுப்பனவுகளிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது சம்பள முரண்பாட்டை  நிவர்த்திப்பதற்கான ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் சிபாரிசு கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பயிற்சி செயலமர்வில் அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன் ,நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்,திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் ஆகியோரால் விரிவுரைகள் நடத்தப்பட்டன . இப்பயிற்சி நெறியின் இறுதிநாளான நாளை  வெள்ளிக்கிழமை அட்டாளச்சேனை  பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் கலந்துகொண்டு விரிவுரை நடத்துகிறார் கருத்துரையிடுக

 
Top