நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா நாளை 15.12.2018 சனிக்கிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

ரெயின்போ கல்லூரியின் நிருவாகிகளான லாபீர் வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடை பெறும் இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை டிப்போ முகாமையாளர் வெள்ளைத்தம்பி ஜஹுபர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார் . கல்முனை பிரதேச செயலக முதியோர் சங்க செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.எம்.ஜலாலுதீன்  கெளரவ அதிதியாகவும் , நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி ஜெ.எம்.ரிஷான் ,லாபிர் வித்தியாலய அதிபர் வை.எல்.ஏ.பஷீர் ,அம்பாறை மாவட்ட முன்பள்ளி கல்வி பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் மௌலவி ஐ.எல்.அனீஸ் ,குழந்தைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  திருமதி எம்.எச்.சம்ரினா ,லாபிர் வித்தியாலய பிரதி அதிபர் சி.எம்.நஜீப் ,லாபிர் வித்தியாலய பகுதி தலைவரும் நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளருமான   எம்.எல்.எம்.அஸ்ரப் , லாபிர் வித்தியாலய பகுதி தலைவர் மௌலவி எம்.ரீ.ஏ.மனாப் ,லாபீர் வித்தியாலய கணித ஆசிரியர் ஐ.எம்.சூபி ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் காலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெறவுள்ளது.கருத்துரையிடுக

 
Top