வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல்
 
மாணவர்களின் ஆற்றலுக்கு முன்னுரிமை வழங்கி  நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப  ஊக்குவிப்பு வழங்க வேண்டும்  அதற்காக ஆசிரியர்களை விடவும் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில்  தரம் ஐந்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கல்முனை செலான் வங்கி கிளையின் ஏற்பாட்டில் நேற்று கல்முனையில் நடை பெற்றது .

வங்கி முகாமையாளர்  பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வலயக்கல்விப் பணிப்பாளர் ஜலீல் மேற்கண்டவாறு பேசினார் 

வலயக்கல்விப்பணிப்பாளர்  ஜலீல் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தொழில்நுட்ப கையாள்கை விடயங்களில் மாணவர்கள் அக்கறை காட்டுகின்ற போது பெற்றோர்கள் அதனைக் கட்டுப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். வளர்ச்சியடைந்துவரும் தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கின்ற போதே  பெற்றோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் .
எதிர்காலத்தில் தொழில் பெறுவதற்கும் தொழிற்ச்சந்தைக்கு போட்டிபோடுவதற்கும் தொழில் நுட்பக்கல்வி இன்றியமையாததொன்றாக காணப்படுகின்றது.

மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளை பயன் படுத்த முனைகின்ற போது  சில பெற்றோர்கள் அதனை தடுத்து நிறுத்த முனைகின்றனர் அவ்வாறன்றி அவர்களை அவதானத்துடன் இருந்து மேற்பார்வை செய்வதன் மூலம் அவர்களின் தொழில் நுட்ப வளர்ற்சியை  அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

நிகழ்வில் கல்முனை கத்தோலிக்க திருச்சபை போதகர் அருட்சகோதரர் எஸ்.டி .வினோத் ,வேல்ட் விஷன் திட்டமுகாமையாளர்  எஸ்.செல்வபதி ,அர்ஷாத்  டெக்ஸ் டைல்ஸ் உரிமையாளர் எம்.எச்.எம்.இப்ராஹிம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர் .

கருத்துரையிடுக

 
Top