சுகாதார வைத்திய அதிகாரி Dr .எம்.எச்.றிஸ்வின்
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஆபத்து இருப்பதாகவும்  பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும்   கல்முனை தெற்கு   எம்.எச்.றிஸ்வின்  எச்சரிக்கை விடுத்துள்ளார் .

அகில இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கல்முனை கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்குக்கும்  டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியும் இன்று (8) சனிக்கிழமை கல்முனை-03 மஸ்ஜிதுல் ஹைராத்  பள்ளிவாசலில் இடம் பெற்றது 
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார வைத்திய அதிகாரி இந்த அறிவிப்பை விடுத்தார் . அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கல்முனை தெற்கு பிரதேசத்துக்குட்பட்ட மாதவன் வீதி ,கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி மற்றும் செயிலான் வீதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுள்ளனர்.
மழை  காலம் என்பதால் மக்கள் மிக அவதானத்துடன் செயல்படவேண்டும் . சுகாதார திணைக்களத்தாலோ அல்லது உள்ளூராட்சி மன்றங்களாலோ மாத்திரம் இந்த உயிர் கொல்லி நோயை கட்டுப்படுத்த முடியாது பொது மக்கள் விழிப்படைவதன் மூலமே நூறு வீத கடுப்பாடுக்குள் கொண்டுவர முடியும். டெங்கு ஒழிப்புக்காக சட்டநடவடிக்கை எடுக்கப்படுகின்ற போது பொது மக்களுக்கும் சுகாதார திணைக்களங்களுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன  அந்த முரண்பாட்டுடன்  மனித உயிருடன் விளையாட முடியாது எனவே ஒவ்வொருவரும் இந்த நோயின் தாக்கத்தை புரிந்து கொண்டு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டும் என கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்வின்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியின் இந்த அறிவிப்பையடுத்து அகில இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கல்முனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் பங்களிப்புடன்  இன்று சிரமதானப்பணி மஸ்ஜிதுல் ஹைராத்  பள்ளிவாசலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் கல்முனை கிளை அமைப்பாளர் கே.அப்துல் ஹமீட் தலைமையில் நடை பெற்ற சிரமதான ஆரம்ப நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான கே.சிவலிங்கம் ,எம்.நிஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசலில் இடம் பெற்ற  விழிப்புணர்வு கருத்தரங்கை தொடர்ந்து  கல்முனை-03 மாதவன் வீதி மற்றும் கடக்கரைப் பள்ளி வீதிகளில் ஒவ்வொரு வீடாக சோதனையிடப்பட்டு  டெங்கு நுளம்பு பெருகும் பொருட்கள் அகற்றப்பட்டன 

கருத்துரையிடுக

 
Top