கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது . இதற்கான நியமனம்  கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
கல்முனை வலயத்துக்குட்பட்ட  மருதமுனை அல் -மதீனா வித்தியாலயம் , கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் வித்தியாலயம் , கல்முனை சுவாமி விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே இந்த நிரந்தர அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே .எம். மன்சூர் ஒப்பமிட்டு உடனடியாக செயற்படும்வண்ணம்  அனுப்பி வைக்கப் பட்டுள்ள கடிதத்தில்  காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில்  பிரதி அதிபராக கடமை புரியும் கே.வரதநாதன்  கல்முனை சுவாமி விபுலானந்தா வித்தியாலய அதிபராகவும் , சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலய பிரதி அதிபராக கடமையாற்றும் ஏ.ஜீ.எம்.றிஷாத்  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் வித்யாலய அதிபராகவும், மருதமுனை அல் -ஹம்ரா   வித்தியாலய  அதிபராக கடமையாற்றும் ஏ.குணுக்கத்துல்லா மருதமுனை அல் -மதீனா வித்தியாலயத்துக்கும்  அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் .

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்து கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நேற்று (17) அனுப்பி வைக்கப்பட நியமனக் கடிதங்கள் உரியவர்களிடம் நேரடியாக ஒப்படைத்துள்ளதாக கல்முனை வலயக்  கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top