தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பிந்திய தகவலின்படி 

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 5 பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 5 பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top