உலக சமாதான தினத்தையொட்டிய  கல்முனை வலயக்கல்வி அலுவலக சமாதான தின நிகழ்வு நேற்று  சமாதானக் கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ரஸீன் தலைமையில் நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடை பெற்றது.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  பிரதிக்கல்வித் பணிப்பாளர் திருமதி ஜிஹான அலிஃப் , ஆங்கில உதவிக்கல்வித் பணிப்பாளர் ஏ.கலீல், உதவிக்கல்விப் பணிப்பாளர் எ.மலிக்  கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் , நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் ஏ.எல்.நிஸாமுத்தீன், நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் சி.பி.நஜீப்  உட்பட முக்கியஸ்தர்கள்  பலர் கலந்து கொண்டனர் .
பாடசாலை மாணவர்களின் காலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப் பட்டது 

கல்முனை  வலயத்தில் சமாதான கல்விக்கு அர்ப்பணிப்பு செய்துவரும் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் சமாதானக் கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ரஸீன் மற்றும் ஆசிரியர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார் 








கருத்துரையிடுக

 
Top