கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்  சோதனை சாவடியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்படட பெரியநீலாவணையை  சேர்ந்த  கணேஷ் தினேஷ் என்ற பொலிஸாரின்  சடலம்  இன்று  (02) பெரியநீலாவணை மயானத்தில் பூரண பொலிஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இன்று காலை  மரணித்தவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த பெரியநீலாவணை  இல்லத்துக்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர்  ரோஹித போகொல்லாகம  இறுதி அஞ்சலி செலுத்தினார் 

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக்கொடியினால் மூடப்பட்ட பேழையில் எடுத்துச் செல்லப்பட்ட  சடலம்  பொலிஸாரினால் 39 துப்பாக்கி வேட்டுக்கள்  தீர்க்கப்பட்டு அடக்கம் செய்யப் பட்டது 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பிவைக்கப்பட்ட  அனுதாப செய்தி ஜனாதிபதியின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி பெர்ணாண்டுவினால் அங்கு வாசிக்கப்பட்டது . அதே போன்று பொலிஸ் மா அதிபரினால் அனுப்பிவைக்கப்பட்ட அனுதாப செய்தியை  பொலிஸ் அதியட்சகர் ஏ.எம்.றபீக் வாசித்தார் .

மரணித்த பொலிஸாரின் இறுதி சடங்கில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .
கருத்துரையிடுக

 
Top